விளையாட்டு
சதமடித்த டாம் லாதம்

லாதம் , கான்வாய் அபாரம் - முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 349/1

Update: 2022-01-09 17:59 GMT
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 186 ரன்கள் குவித்து அசத்தினார்.
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்டில் வங்காளதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம், வில் யங் களமிறங்கினர்.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யங் அரை சதமடித்தார். 148 ரன்கள் சேர்த்த நிலையில் 54 ரன்னில் யங் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய டேவன் கான்வாய் லாதமுடன் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி கிடைத்த பந்துகளை பவுண்டரிகளாக விளாசினர். சிறப்பாக ஆடிய டாம் லாதம் சதமடித்து அசத்தினார்.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்துள்ளது. டாம் லாதம் 186 ரன்களுடனும், கான்வாய் 99 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். 

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் பொறுப்புடன் ஆடி வருகிறது. 
Tags:    

Similar News