விளையாட்டு
ஆஷஸ் தொடரில் ருசிகரம் - ஆஸ்திரேலியா ரசிகைக்கு சர்பிரைஸ் ப்ரோபோசல் கொடுத்த இங்கிலாந்து ரசிகர்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகரான ராப், பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாளில் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் முன் தனது ஆஸ்திரேலிய காதலியான நாட் இடம் சர்பிரைசாக தனது காதலை வெளிப்படுத்தினார். ‘‘நான்கு வருடம் ஆகிறது. என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என அவர் கேட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத நாட் சிரித்தபடி அவரது காதலுக்கு ஓகே சொல்லி கட்டி அனைத்தப்படி முத்ததை இருவரும் பறிமாரி கொண்டனர். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மைதானத்தில் சர்பிரைஸ் ப்ரோபோசல் - ஆஷஸ் தொடரில் ருசிகரம்#AUSvENG#Ashes2021pic.twitter.com/KXc2EFzDOD
— Maalai Malar News (@maalaimalar) December 10, 2021
2017-2018 ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலியா ரசிகையான நாட்டை முதன் முதலில் ராப் சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.