விளையாட்டு
அஷ்வின்

அதிக முறை தொடர் நாயகன் விருது - சாதனை பட்டியலில் 2ம் இடம்பிடித்தார் அஷ்வின்

Published On 2021-12-07 00:59 GMT   |   Update On 2021-12-07 00:59 GMT
சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் அஷ்வின் இரண்டாம் இடம்பிடித்தார்.
மும்பை:

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி வெறும் 43 நிமிடங்களிலேயே இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.

14 விக்கெட்களை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பு அளித்த ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஷ்வின் தென் ஆப்பிரிக்கா வீரர் காலிசுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News