ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை - வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
பதிவு: டிசம்பர் 06, 2021 04:36 IST
பந்தை தட்டிச்செல்லும் வீரர்கள்
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.
கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
Related Tags :