செய்திகள்
சூர்யகுமார் யாதவ்

இவர் கிடைச்சது மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிர்ஷ்டம்: சபா கரீம்

Published On 2021-09-19 13:26 GMT   |   Update On 2021-09-19 13:26 GMT
3-வது அல்லது 4-வது அல்லது இடத்தில் களம் இறங்கி நங்கூரமாக நின்று பேட்டிங் செய்யும் வல்லமை படைத்தவர் சூர்யகுமார் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.

இந்நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.

இதையடுத்து,  இந்த தொடர் குறித்து பல்வேறு கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனடிபடையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான சபா கரீம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.



மும்பை இந்தியன் அணி குறித்து  சபா கரீம் கூறுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடைத்தது, அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். போட்டியில், மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் களத்தில் நீண்ட நேரம் நின்று தொடர்ச்சியாக ரன்களை குவிப்பவர்.  இவரின் விளையாட்டிற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிதளவு இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News