செய்திகள்
பிரதமர் மோடி

50 ஆண்டுக்குப் பிறகு ஓவல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி - பிரதமர் மோடி பாராட்டு

Published On 2021-09-07 00:34 IST   |   Update On 2021-09-07 00:34:00 IST
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.



இந்திய அணியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், தடுப்பூசிகள் ஒரு கோடிக்கு மேல் போடப்பட்டு சாதனை படைத்துள்ளதற்கும் பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மற்றும் கிரிக்கெட் மைதானத்திலும் மீண்டும் மிகச்சிறந்த நாள். எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

Similar News