செய்திகள்
சுகாஷ் யத்திராஜ்

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

Published On 2021-09-05 08:28 IST   |   Update On 2021-09-05 08:28:00 IST
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ், சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  18 பதக்கங்களை வென்றுள்ளது.

Similar News