செய்திகள்
இந்திய வீரர் பிரவீன்குமார்

பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்

Published On 2021-09-03 09:04 IST   |   Update On 2021-09-03 12:08:00 IST
பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்றுள்ளார்.

வெள்ளி வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்.

பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார்.

நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.


Similar News