செய்திகள்
3வது டெஸ்ட் தோல்வி- இந்தியாவை 'யூஸ்லெஸ்' என்று விமர்சித்த மைக்கேல் வாகன்
இங்கிலாந்து மிக அற்புதமாக இந்தப் போட்டியில் விளையாடியதாகவும் இது மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று எனவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
3வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா, முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
Fantastic ruthless performance from England .. that’s as good as it gets .. To do that after Lords shows great character which comes from the Skipper .. India !!!!! A few days to forget .. they really have been useless !!! #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 28, 2021
பின்னர் ஆடிய இந்தியா மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக செத்தேஷ்வர் புஜாரா, 91 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆட்டம் முடிந்ததை அடுத்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன், 'இங்கிலாந்து மிக அற்புதமாக இந்தப் போட்டியில் விளையாடியது. இது மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று. லார்ட்ஸ் மைதான தோல்விக்குப் பின்னர் இப்படியான ஆட்டத் திறனைக் காட்டுவது அவர்களின் பக்குவத்தைக் காட்டுகிறது. குறிப்பாக ஜோ ரூட்டின் பக்குவத்தை எடுத்துக் கூறுகிறது. இந்தியா... அவர்கள் இந்த சில நாட்களை மறந்தாக வேண்டும். அவர்கள் மிகவும் யுஸ்லெஸ்ஸாக இருந்துள்ளார்கள்' என்று விமர்சித்துள்ளார்.
அவரின் இந்தக் கருத்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.