செய்திகள்
நீரஜ் சோப்ரா

இன்ஸ்டாகிராமில் 1.4 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக உயர்ந்த நீரஜ் சோப்ராவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை

Published On 2021-08-11 18:24 IST   |   Update On 2021-08-11 19:07:00 IST
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இன்ஸ்டாகிராமில் நீரஜ் சோப்ராவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். தகுதிச்சுற்றில் முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

தடகளத்தில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. இதனால் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் தன்னம்பிக்கையுடன் இருந்த நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அசுரத்தனமாக 87.03 மீட்டர் தூரம் வீசி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். 2-வது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார்.

மற்ற வீரர்களால் 87 மீட்டர் தூரத்தை தொடமுடியவில்லை. இதனால் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே, யார் இந்த நீரஜ் சோப்ரா என இணைய தளத்தில் அனைவரும் தேட ஆரம்பித்தினர்.

ஒலிம்பிக்கில் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்  நீரஜ் சோப்ராவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரமாக இருந்தது.  தங்கப்பதக்கம் வென்றபின் அதன் எண்ணிக்கை 32 லட்சமாக உயர்ந்துள்ளது.

Similar News