செய்திகள்
பும்ரா

அனைத்து வடிவ போட்டிகளிலும் பும்ரா உலகின் சிறந்த பந்து வீச்சாளர் - இங்கிலாந்து வீரர் பாராட்டு

Published On 2021-08-11 15:20 IST   |   Update On 2021-08-11 15:20:00 IST
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது பந்து வீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என இங்கிலாந்து வீரர் பாராட்டி உள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியதாவது:-

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் அற்புதமான திறமைகள் உள்ளன. அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக உள்ளார். 

ஐ.பி.எல்., இந்தியாவுக்கான ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரை பார்த்து வருகிறோம். அனைத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் தனது பந்து வீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என்றார்.

Similar News