செய்திகள்
பிவி சிந்து

வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா திரும்பிய பி.வி. சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2021-08-03 18:18 IST   |   Update On 2021-08-03 18:18:00 IST
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையுடன் டோக்கியோவில் இருந்து இந்தியா திரும்பிய பி.வி. சிந்துவுக்கு உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016-ல் பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையைப் படைத்த பி.வி. சிந்து, இன்று இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.

Similar News