செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வீரர்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - 81 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூரை வென்றது மதுரை

Published On 2021-08-02 17:34 GMT   |   Update On 2021-08-02 17:34 GMT
திருப்பூர் அணிக்கு எதிராக ஆடிய மதுரை அணியின் ஜெகதீசன் கவுசிக், சதுர்வேத் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
 
முதலில் பேட் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

சுகேந்திரன் 20 ரன்னிலும், பிரவீன் குமார் 35 ரன்னிலும், அனிருத் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின், அதிரடியாக ஆடிய ஜெகதீசன் கவுசிக் 40 ரன்களும், சதுர்வேத் 41 ரன்களும் (நாட் அவுட்), அருண் கார்த்திக் 11 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர்.

திருப்பூர் தரப்பில் முகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. மதுரை பாந்தர்ஸ் அணியின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

இறுதியில், திருப்பூர் அணி  103 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ராஜ்குமார் 42 ரன் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் மதுரை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மதுரை அணி சார்பில் சிலம்பரசன், கவுதம், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News