செய்திகள்
தைவான் வீராங்கனை

பெண்கள் 59 கிலோ பளுதூக்குதல் போட்டியில் சீன தைஃபே தங்கப் பதக்கம்

Published On 2021-07-27 10:32 GMT   |   Update On 2021-07-27 10:32 GMT
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 59 கிலோ குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை தங்கம் வென்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 59 கிலோ குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், மொத்தம் 8 பேர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில், சீன வீராங்கனை ஸ்னாட்ச் பிரிவில் 103 கிலோ மற்றும்  கிளீன்   அண்டு ஜெர்க் பிரிவில் 133 கிலோ என மொத்தம்  236 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.

துர்க்மெனிஸ்தான் நாட்டை சேர்ந்த வீராங்கனை  ஸ்னாட்ச் பிரிவில் 96 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 121 கிலோ என மொத்தம் 217 எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றார்.

ஜப்பான் வீராங்கனை ஸ்னாட்ச் பிரிவில் 94 கிலோ மற்றும்  கிளீன்  அண்டு ஜெர்க் பிரிவில் 120 கிலோ என மொத்தம் 214 எடையைத் தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றுள்ளார்.
Tags:    

Similar News