செய்திகள்
150 ரன் குவித்த மக்மதுல்லா

ஹராரே டெஸ்டில் மக்மதுல்லா, தஸ்கின் அபாரம் - வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவிப்பு

Published On 2021-07-09 05:49 IST   |   Update On 2021-07-09 17:26:00 IST
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் மக்மதுல்லா - தஸ்கின் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.
ஹராரே:

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது. 

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து இருந்தது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல் 70 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா (54 ரன்), தஸ்கின் அகமது (13 ரன்) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்தினார்கள். 

முதல் அரைசதத்தைக் கடந்த தஸ்கின் அகமது 75 ரன்னில் வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 191 ரன்கள் திரட்டியது. டெஸ்ட் போட்டியில் இந்த விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும்.



இறுதியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 5-வது சதத்தைப் பூர்த்தி செய்த மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா  2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து,  முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. 

Similar News