செய்திகள்
4 விக்கெட் வீழ்த்திய டாம் கர்ரன்

மழையால் கைவிடப்பட்ட 3வது போட்டி - ஒருநாள் தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து

Published On 2021-07-05 00:26 IST   |   Update On 2021-07-05 00:26:00 IST
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் டாம் கர்ரன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 41.1 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாசன் ஷனகா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.



இங்கிலாந்து அணி சார்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டும், வோக்ஸ், வில்லே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அப்போது பெய்த மழை ஆட்டம் முடியும் வரை தொடர்ந்தது. இதனால் ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. தொடர் நாயகன் விருது டேவிட் வில்லேவுக்கு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே, டி20 தொடரை 3-0 என இலங்கை அணி இழந்திருந்தது நினைவிருக்கலாம்.

Similar News