செய்திகள்
கைல் ஜாமிசன்

கைல் ஜாமிசன் எதிர்கால சூப்பர் ஸ்டார்: நசீர் ஹுசைன் பாராட்டு

Published On 2021-06-21 12:10 GMT   |   Update On 2021-06-21 12:10 GMT
இந்தியாவை முதல் இன்னிங்சில் 217 ரன்னில் ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்த கைல் ஜாமிசன், எதிர்கால சூப்பர் ஸ்டார் என நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் உலக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மழையால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் 64.4 ஓவர்கள் வீசப்பட்டது, நேற்று 76.3 ஓவர்கள் வீசப்பட்டன. மூன்று நாட்கள் முடிவில் 141.1 ஓவர்கள் மட்டுமே விசப்பட்டுள்ளன.

இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன்தான். அவர் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். 12 மெய்டன் ஓவர்கள் வீசினார்.

கைல் ஜாமிசன் இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 8-வது போட்டியிலேயே ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்துள்ளார்.

தலைசிறந்த அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய கைல் ஜாமிசன் எதிர்கால சூப்பர் ஸ்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.



கைல் ஜாமிசன் குறித்து நசீர் ஹுசைன் கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் கைல் ஜாமிசனின் தாக்கம், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகப்பெரியது. அவர் 8 போட்டியில்தான் விளையாடியுள்ளார். அதற்குள் ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதுபோன்ற உடனடி தாக்கம் மிகப்பெரியது.

இங்கிலாந்துக்கு வந்த அவர் புல்லர் பந்து வீச்சு (bowl fuller) குறித்து கற்றுக் கொண்டார். இந்தியாவுக்கு எதிராக பந்து வீசும் கோணத்தை (angles) மாற்றிக் கொண்ட விதம், அவர் உடனடியாக கற்றுக்கொண்டார் என்பதை காண்பிக்கிறது. மிகப்பெரிய போட்டியில், சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டார் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்’’ என்றார்.
Tags:    

Similar News