செய்திகள்
கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா

ஐபிஎல் இடமாற்றத்துக்கு வானிலைதான் காரணம் - கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தகவல்

Published On 2021-05-30 06:56 GMT   |   Update On 2021-05-30 06:56 GMT
ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

மும்பை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை இந்த போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இந்தநிலையில் ஐ.பி.எல் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பி.சி.சி.ஐ.யின் அவசர செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் ஐ.பி.எல் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது ஏன்? என்பது குறித்து பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:-

செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்டது.

இதில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News