செய்திகள்
ஆசிய கோப்பை கிரிக்கெட்

2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-க்கு ஒத்திவைப்பு

Published On 2021-05-23 19:34 IST   |   Update On 2021-05-23 19:34:00 IST
கொரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். உலகக்கோப்பையை கருத்தில் இருந்து அதற்கு ஏற்றபடி டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.

இந்த வருடம் டி20 தொடர் நடத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் கடந்த ஆண்டு போதுமான அளவிற்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த வருடம் அதிகமான போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளன. மேலும், கொரோனா தொற்றால் அடிக்கடி போட்டி அட்டவணையை மாற்றக்கூடிய நிலையும் ஏற்படுகிறது.

ஆகவே,ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News