செய்திகள்
ராகுல் டிராவிட்

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்?

Published On 2021-05-20 10:04 GMT   |   Update On 2021-05-20 10:04 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, இலங்கை தொடரும் நடைபெற இருப்பதால் ரவி சாஸ்திரி இரண்டு இடத்திலும் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது இலங்கை தொடர் ஜூலை 13-ந்தேதியில் இருந்து ஜூலை 27-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்துக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சென்று விடுவார்கள். அதேபோல் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் சென்று விடுவார். இதனால் இந்திய அணிக்கு தவான் அல்லது ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற கூறப்படுகிறது.



இந்த நிலையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராகுல் டிராவிட் பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைமை ஆலோசகராக உள்ளார்.

ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ அணி, 19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News