செய்திகள்
விராட் கோலி, ஜேமிசன்

நெட் பயிற்சியில் விராட் கோலிக்கு பந்து வீச மறுப்பு: கைல் ஜேமிசன் இவ்வாறு செய்வதற்கு காரணம்

Published On 2021-04-30 10:15 GMT   |   Update On 2021-04-30 10:15 GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த இருப்பதால் ஜேமிசன் கோலிக்கு பந்து வீச மறுத்துவிட்டார்.
ஆர்சிபி அணியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இடம் பிடித்துள்ளார். 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த பின்னர், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டியுக் பந்து பயன்படுத்தப்படும்.

ஆர்சிபி வீரர்கள் தொடரின் தொடக்கத்தில் பயிற்சி மேற்கொண்டபோது, ஜேமிசனிடம் விராட் கோலி வலைப்பயிற்சியின்போது டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று கேட்டுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஜேமிசன், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை விராட் கோலி டியுக் பந்தை சிறப்பாக எதிர்கொண்டால், இறுதிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்பதனாலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அந்த அணியில் இடம் பிடித்துள்ள டேனியல் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.



இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கிறிஸ்டியன். நாங்கள் நெட் பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது விராட் கோலி ஜேமிசன் டெஸ்ட் போட்டி பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

விராட் கோலி: ஜேமிசன் நீங்கள். டியுக் பந்தில் அதிகமாக பந்து வீசினீர்களா? என்றார்.

மேலும் அது பற்றி பேசிக் கொண்டனர்.

ஜேமிசன்:
ஆம் நான் இங்கே ஒன்றிரண்டு பந்துகள் கொண்டு வந்துள்ளேன். இங்கிலாந்து செல்வதற்கு முன் இங்கு பயிற்சி மேற்கொள்வேன் என்றார்.

விராட் கோலி: அப்படியா, வலைப்பயிற்சியில் எனக்கு பந்து வீச விரும்புவீர்களா? என்றார். மேலும், நான் உங்கள் பந்தை எதிர்கொள்ள மிகவும் சந்தோசம் அடைவேன் என்றார்.

ஜேமிசன்: நான் உங்களுக்கு பந்து வீச வாய்ப்பு இல்லை. நீங்கள் நான் பந்தை ரிலீஸ் செய்யும் இடத்தை கவனித்து விடுவீர்கள். அதன்பின் எல்லாவற்றையும் டியுக் பந்தில் செய்து விடுவீர்கள் என்றார்.

இப்படி உரையாடல் நடந்ததாக டேனியில் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News