செய்திகள்
ஆடம் ஜம்பா

மிகவும் பாதிக்கப்படக்கூடிய ‘பயோ-பபுள்’ என்கிறார் ஆடம் ஜம்பா

Published On 2021-04-28 16:54 IST   |   Update On 2021-04-28 17:22:00 IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு போட்டி நடைபெற்றபோது, மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன் என்று ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உடனடியான ஆஸ்திரேலியா சென்றார்.

நேற்று  சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘‘நாங்கள் சில பபுள்களை பெற்றிருந்தோம். அது மிகவும் பாதிக்கக்கூடியதாக நான் உணர்ந்தேன். இப்படி உணர்ந்ததற்கு, போட்டி இந்தியாவில் நடப்பதுதான் காரணம். நான் எப்போதுமே இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கவனம் குறித்து பேசுகிறேன். அதனால் இது மிகவும் பாதிக்கக்கூடியதாக உணர்ந்தேன்.

ஐபிஎல் போட்டி ஆறு மாதத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது நான் இதுபோன்று உணர்ந்ததில்லை. மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில், இந்த ஐபிஎல் போட்டியை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் என உணர்கிறேன். ஆனால் உண்மையிலேயே, ஏராளமான அரசியல் உள்ளன.

இந்த வருடத்தின் கடைசியில் ஐபிஎல் போட்டியில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் உலகத்தில் இது அடுத்த விவாதமாக இருக்கும். ஆறு மாதம் என்பது நிண்ட நாட்களை கொண்டது.

கொரோனா சூழ்நிலை மிகவும் மோசமான உள்ளது. நான் அணியில் விளையாடவில்லை. பயிற்சி மேற்கொண்டேன். அதனால் உத்வேகத்தை நான் காணவில்லை. பபுள் கடினம், சொந்த நாட்டிற்கு  செல்லும் வாய்ப்பு, விமானத்தடை என பலவிதமான பேச்சுக்கள் எழுகின்றன. அதனால் இது சிறந்த நேரம் என்று நினைத்தேன்.

ஏராளமான வீரர்கள், பயிற்சியாளர்கள், இக்கட்டான இந்த நிலையில் கிரிக்கெட் ஒரு நிவாரணமாக இருக்கும் என்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது கிரிக்கெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்’’ என்றார்.

Similar News