செய்திகள்
சிவம் துபே பந்தை விரட்டும் காட்சி

பெங்களூருக்கு 178 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான் அணி

Published On 2021-04-22 16:19 GMT   |   Update On 2021-04-22 16:19 GMT
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 178 ரன் இலக்கு வைத்தது ராஜஸ்தான் அணி.
ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆனால் இவர்கள் வந்த வேகத்தில் பட்லர் 8, மனன் வோரா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இறங்கிய டேவிட் மில்லர் ரன் எடுக்காமல் நடையை காட்டினார்.

அடுத்து சஞ்சு சாம்சன், சிவம் துபே இருவரும் மட்டுமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 21 ரன்கள் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடித்து மேக்ஸ்வெலிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த சிவம் துபே அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து இறங்கிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா , கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
Tags:    

Similar News