செய்திகள்
அபிஷேக் சர்மா, ரஷித் கான்

எதிர்காலத்தில் இந்தியாவின் சரியான ஆல்-ரவுண்டர்: இளைஞரை பாராட்டிய ரஷித் கான்

Published On 2021-04-22 15:38 IST   |   Update On 2021-04-22 15:38:00 IST
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா எதிர்காலத்தில் இருந்தியாவின் சரியான ஆல்-ரவுண்டராக விளையாடுவார் என ரஷிக் கான் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 120 ரன்களே அடித்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கலீல் அகமது 3 விக்கெட்டும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டும், ரஷித் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, இலக்கை எட்டியது.

இந்த போட்டிக்குப்பிறகு அபிஷேக் சர்மா குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நீங்கள் எதிகாலத்தில் இந்தியாவின் சரியான ஆல்-ரவுண்டராக விளையாடுவீர்கள். அத்துடன் ஏராளமான போட்டிகளை அணிக்காக தேடிக்கொடுப்பீர்கள். உங்களிடம் ஏராளமான திறமை உள்ளது. கடுமையாக உழைத்தாரல், வெற்றி பெறுவீர்கள்’’ என்றார்.

Similar News