செய்திகள்
PBKSvSRH

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு

Published On 2021-04-21 15:18 IST   |   Update On 2021-04-21 15:18:00 IST
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேபியன் ஆலன், ஹென்ரிக்ஸ் ஆகியோரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவும் அறிமுகம் ஆகிறார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேபியன் ஆலன், ஹென்ரிக்ஸ் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவ் அறிமுகம் ஆகிறார்.



பஞ்சாப் கிங்ஸ் அணி:-

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் வோக்ஸ், 4. ஹென்ரிக்ஸ், 5. நிக்கோலஸ் பூரன், 6. தீபக் ஹூடா, 7. ஷாருக் கான், 8. பேபியன் ஆலன், 9. முருகன் அஷ்வின், 10 முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.



சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் சிங், 5. விஜய் சங்கர், 6. அபிஷேக் சர்மா, 7. சித்தார்த் கவுல், 8. கேதர் ஜாதவ், 9. ரஷித் கான், 10. புவி, 11. கலீல் அஹமது,

Similar News