செய்திகள்
தீபக் ஹூடா, கேஎல் ராகுல்

ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்

Published On 2021-04-12 21:37 IST   |   Update On 2021-04-12 21:37:00 IST
கேஎல் ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் விளாச, அறிக வீரர் சகாரியா 3 விக்கெட் சாய்த்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கிங்ஸ் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கிறிஸ் கெய்ல் களம் இறங்கினார்.

இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தீபக் ஹூடா ருத்ர தாண்டவம் ஆடினார். கேஎல் ராகுல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 17.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த பூரன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 



மறுமுனையில் கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார்.

கேஎல் ராகுல், தீபக் ஹூடா, கிறிஸ் கெய்ல் ஆகியோரின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. என்றாலும் 221 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளது.

Similar News