செய்திகள்
SRHvKKR

கொல்கத்தாவிற்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2021-04-11 19:15 IST   |   Update On 2021-04-11 19:15:00 IST
ஆடுகளம் அதிக அளவில் ட்ரையாக உள்ளது. இந்த ஆடுகள் சற்று வித்தியாசமானது. நாங்கள் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம் என டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:-

1. ஷுப்மான் கில், 2. ராகுல் திரபாதி, 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. அந்த்ரே ரஸல், 7. ஷாகிப் அல் ஹசன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஹர்பஜன் சிங், 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. சகா, 4. மணிஷ் பாண்டே, 5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 7. முகமது நபி, 8. ரஷித் கான், 9. புவி, 10. டி நடராஜன், 11. சந்தீப் சர்மா

Similar News