செய்திகள்
மித்தாலி ராஜ்

10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை - மித்தாலி ராஜ் சாதனை

Published On 2021-03-12 13:07 IST   |   Update On 2021-03-12 13:07:00 IST
மகளிர் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் 10,273 ரன்கள் அடித்து இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தியா - தென் ஆப்பிக்கா இடையே மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப்போட்டியின் மூலம் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். அத்துடன் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

சர்வதேச அளவில் 10,273 ரன்கள் அடித்து இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட் முதலிடத்தில் இருக்கிறார். இதனையடுத்து மித்தாலி ராஜ் இப்போது இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 36 ரன்கள் எடுத்து மித்தாலி ராஜ் ஆட்டமிழந்தாலும், அவரின் 10 ஆயிரம் ரன் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் இதுவரை 75 அரை சதமும், 8 சதமும் விளாசியுள்ளார்.

Similar News