செய்திகள்
ஜோ ரூட்

டெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்

Published On 2021-01-25 08:12 GMT   |   Update On 2021-01-25 08:12 GMT
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 186 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

காலே:

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 18 பவுண்டரிகளுடன் 186 ரன் குவித்தார்.

இந்த ரன் குவிப்பால் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் 4-வது இடத்துக்கு முன்னேறினார். அவர் பாய்காட் (8,114 ரன்), பீட்டர்சன் (8,181), டேவிட் கோவர் (8,231) ஆகியோரை முந்தினார்.

ஜோரூட் 99 டெஸ்டில் 180 இன்னிங்சில் விளையாடி 8,238 ரன் எடுத்திருந்தார். சராசரி 49.62 ஆகும். 19 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச மாக 254 ரன் குவித்துள்ளார். 

Tags:    

Similar News