செய்திகள்
அரை சதம் கடந்த ஸ்மித்

சிட்னி டெஸ்டில் லபுசேன், ஸ்மித் அரை சதம் - 4ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182/4

Published On 2021-01-10 07:26 IST   |   Update On 2021-01-10 07:26:00 IST
இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னி:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி புகோவ்ஸ்கி, லபுஸ்சேன், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 105.4 ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டு, பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அவுட்டாகினர்.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும்,  ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணியின் லபுசேன் அரை சதம் கடந்தார். அவருடன் ஸ்மித்தும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி103 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 73 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஸ்மித் மீண்டும் அரை சதம் கடந்து அசத்தினார். 

நான்காம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்தியாவை விட 276 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா சார்பில் சைனி 2 விக்கெட்டும், சிராஜ், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News