செய்திகள்
நிதானமாக ஆடும் புஜாரா

சிட்னி டெஸ்ட் - 3ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 180/4

Published On 2021-01-09 07:09 IST   |   Update On 2021-01-09 07:09:00 IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னி:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி புகோவ்ஸ்கி, லபுஸ்சேன், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 105.4 ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டு, பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதன்பின், இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன்கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 26 ரன்னில் அவுட்டானார். சுப்மான் கில் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து வெளியேறினார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ரன்னில் ரன் அவுட்டானார்.

புஜாரா பொறுமையுடன் ஆடினார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு அளித்தார்.

மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 42 ரன்னும், பண்ட் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டும்,  ஹசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News