செய்திகள்
வில்லியம்சன்

வில்லியம்சனின் 4-வது இரட்டை சதம்

Published On 2021-01-05 07:35 GMT   |   Update On 2021-01-05 07:35 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இது அவரது 4-வது இரட்டை சதம் ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவரது 4-வது இரட்டை சதம் ஆகும்.

இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 251 ரன்னும் (டிசம்பர் 2020), இலங்கைக்கு எதிராக 242 ரன்னும் (ஜனவரி 2015), வங்கதேசத்துக்கு எதிராக 200 ரன்னும் (பிப்ரவரி 2019) எடுத்து இருந்தார்.

இந்த 4 இரட்டை சதங்களையும் அவர் நியூசிலாந்து மைதானங்களில் தான் அடித்தார். 4-வது இரட்டை சதம் மூலம் நியூசிலாந்து வீரர்களில் அதிக இரட்டை சதம் அடித்த மெக்கலமை வில்லியம்சன் சமன் செய்தார்.

இந்த டெஸ்டில் வில்லியம்சனும், நிக்கோலசும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடியாக 369 ரன் குவித்து சாதனை படைத்தனர். 4-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்தின் அதிக ரன் இதுவாகும்.

ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணியின் 3-வது சிறந்த ரன் குவிப்பாகும். 1991-ம் ஆண்டு ஜோன்ஸ்- மார்டின்குரோவ் ஜோடி இலங்கைக்கு எதிராக 467 ரன் (3-வது விக்கெட்) குவித்ததே சாதனை ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக 1972-ல் டர்னர்-ஜார்விஸ் ஜோடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 387 ரன் குவித்து இருந்தது.
Tags:    

Similar News