செய்திகள்
இந்திய டெஸ்ட் அணி ஜெர்சியில் டி நடராஜன்

வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

Published On 2021-01-05 12:38 IST   |   Update On 2021-01-05 12:38:00 IST
வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார் என இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சிட்னி:

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு  முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம். அடுத்தகட்ட சவால்களை எதிர்கொள்ள தயார்’ என பதிவிட்டுள்ளார்.


Similar News