செய்திகள்
ஷாகிப் அல் ஹசன்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்காளதேச உத்தேச அணியில் ஷாகிப் அல் ஹசன்

Published On 2021-01-04 20:20 IST   |   Update On 2021-01-04 20:20:00 IST
ஒரு வருட தடைக்காலம் முடிந்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்காளதேச உத்தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார்.
வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்ட தரகர்கள் அவரை தொடர்பு கொண்டதை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதை ஒப்புக்கொண்டார். இதனால் ஒருவருடம் தடைவிதிக்கப்பட்டது.

சமீபத்தில் அவரது தடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்காளதேச உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார். அதேவேளையில் முன்னாள் கேப்டன் மோர்தசாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.

வங்காளதேச அணி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் விளையாடும் முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.

Similar News