செய்திகள்
டீன் எல்கர், இலங்கை வீரர்கள்

செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்கள் குவிப்பு

Published On 2021-01-04 12:23 GMT   |   Update On 2021-01-04 12:23 GMT
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னங்சில் 302 ரன்கள் குவித்தது.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜேயின் (6 விக்கெட்) சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 157 ரன்னில் சுருண்டது. தொடக்க வீர்ர குசால் பெரேரா அதிகபட்சமாக 60 ரன்கள் விளாசினார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கரின் சிறப்பான பேட்டிங்கால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் விளாசியது. எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் சதம் அடித்து 127 ரன்னில் வெளியேறினார். டுஸ்சென் அரைசதம் அடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த டு பிளிஸ்சிஸ் (8), டி காக் (10), டெம்பா பவுமா (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இலங்கை அணி தரப்பில் விஷ்பா பெர்னாண்டோ 5 விக்கெட் சாய்த்தார். 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News