செய்திகள்
விவிஎஸ் லட்சுமண், கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி: லட்சுமண்

Published On 2021-01-04 11:16 GMT   |   Update On 2021-01-04 11:16 GMT
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு போட்டி தொடங்கியபின் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில், 3-வது டெஸ்டிலும் சதம் விளாசினார்.

இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சதம் கண்டுள்ளார். இந்த நிலையில் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், கேன் வில்லியம்சன் இதுகுறித்து கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக கேன் வில்லியம்சன் சதம் அடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஒர்க் எத்திக்ஸ் நம்பமுடியாத வகையில் உள்ளது. அவருடைய வெற்றிக்கு பின்னால், எந்தவொரு போட்டிக்கும் அவர் தயார் ஆகுவதுதான் முக்கிய காரணமாக உள்ளது. எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரியாக உள்ளார்’’ என்றார்.
Tags:    

Similar News