செய்திகள்
சோயிப் அக்தர், முகமது ஆசிஃப்

முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை பார்த்தேன்: சோயிப் அக்தர்

Published On 2021-01-04 10:39 GMT   |   Update On 2021-01-04 16:15 GMT
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை நான் பார்த்தேன் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முகமது ஆசிஃப். துல்லியமான வகையில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். இதனால் அடுத்த மெக்ராத் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் 2010-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டார்.

இதனால் ஐந்தாண்டு தடைபெற்றார். அதன்பின் முகமது ஆசிஃபால் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அவரால் திரும்பமுடியவில்லை.

இந்த நிலையில் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது எதிரணி பேட்ஸ்மேன்கள் அழுதார்கள். அதை நான் பார்த்தேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முகமது ஆசிஃப் பந்து வீச்சை நான் பார்த்தவகையில், வாசிம் அக்ரமை விட சிறந்தவராக இருந்தார். அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும்போது கண்ணீர் விட்டதை பார்த்தேன். லட்சுமண் கூட ஒருமுறை, முகமது ஆசிஃபின் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி எனச் சொன்னார். ஆசியா டெஸ்ட் சாம்பியன்சிப்பில் ஏபி டி வில்லியர்ஸ் அழ ஆரம்பித்தார்.

அவருக்குப்பின் தற்போது பும்ரா புத்திசாலியான பந்து வீச்சாளராக திகழ்கிறார். டெஸ்ட் போட்டியில் அவரது உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுப்பினர். நான் கூட அவரை நெருக்கமாக பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது’’ என்றார்.

முகமது ஆசிஃப் 23 டெஸ்ட் போட்டிகளில் 106 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
Tags:    

Similar News