செய்திகள்
சுரேஷ் ரெய்னா

மும்பை நைட் கிளப் சோதனையில் சுரேஷ் ரெய்னா கைது: ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Published On 2020-12-22 22:44 IST   |   Update On 2020-12-22 22:44:00 IST
மும்பை விமான நிலையத்திற்கு அருகே உள்ள கேளிக்கை விடுதியில் மும்பை மாநகர போலீசார் சோதனையிட்டபோது ரெய்னா கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள கொரேனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக மகாராஷ்டிரா மாநில அரசு இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணி வரை கடைகள், கேளிக்கை விடுதி, பப்கள் திறக்க அனுமதி கிடையாது.

போலீசார் இரவு நேர சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று விமான நிலையம் அருகே உள்ள அந்தேரி பகுதியில் அரசு அனுமதித்த நேரம் கடந்து கேளிக்கை விடுதி செயல்பட்டதை அடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டு, அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.

சுமார் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஒருவர் எனத் தெரிவந்துள்ளது. பாடகர் குறு ரந்த்வானா மற்றும் பாலிவுட் பிரபலம் ஸூசென் கானும் கைதாகி உள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் கைதான ரெய்னா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரெய்னா தரப்பில் இருந்து ‘‘அவர் ஷூட்டிற்கிற்காக வந்துள்ளார். ஷூட்டிற் முடிய நள்ளிரவு ஆனதால், சக நபர் ஒருவருடன் சாப்பிட வந்துள்ளார். காலையில் டெல்லி செல்ல இருந்தார். நேரக்கட்டுப்பாடு குறித்து அறிந்திருக்கவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News