செய்திகள்
ரகானே, வாசிம் ஜாபர்

ரகானேவுக்கு வாழ்த்து தெரிவித்து, புதிர் மூலம் தகவல் ஒன்றையும் பதிவு செய்த வாசிம் ஜாபர்

Published On 2020-12-21 14:40 GMT   |   Update On 2020-12-21 14:40 GMT
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை வகிக்க இருக்கும் ரகானேவுக்கு வாழ்த்து கூறிய வாசிம் ஜாபர், புதிராக ஒரு தகவலையும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா-இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டாக நடக்கிறது.விராட் கோலி இந்தியா திரும்பியதால், ரகானே கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

இந்திய அணியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். பல முன்னணி கிரிக்கெட் விமர்சகளும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ரஞ்சி டிராபியில் சாதனைப் படைத்துள்ள முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர், 
ரகானே
வுக்கு ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ‘‘டியர் ரகானே, இங்கே உங்களுக்கான ஒரு மெசேஜ் மறைந்து உள்ளது. பாக்சிங் டே டெஸ்டிற்காக குட் லக்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த தகவலில் ஷுப்மான் கில்கேஎல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News