செய்திகள்
உலக கோப்பை குத்துச்சண்டையில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள்

உலக கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 9 பதக்கங்கள்

Published On 2020-12-20 17:49 IST   |   Update On 2020-12-20 17:49:00 IST
ஜெர்மனியில் நடைபெற்ற உலக கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா மூன்று தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றது.
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் கடந்த 16-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 3 தங்க பதக்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.

ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹாலை எதிர்த்து களம் இறங்க இருந்த ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யன் கடைசி நேரத்தில் விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

இந்திய வீரர்கள் முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கிலோ) அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.

Similar News