செய்திகள்
வில்லியம்சன்

டெஸ்ட் தரவரிசை: கோலி, வில்லியம்சன் இணைந்து 2-வது இடம்

Published On 2020-12-08 07:40 GMT   |   Update On 2020-12-08 07:40 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்சுமித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட்கோலியும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் இணைந்து 2-வது இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 886 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் முதல் இடத்தில் இருக்கும் சுமித்துக்கும் இடையே 25 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்தார். லபுசேன் (ஆஸ்திரேலியா) 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாபர் ஆசம் (பாகிஸ்தான்) 797 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த நீல்வாக்னர் 849 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளார்.

ஸ்டூவர்ட்பிராட் (இங்கிலாந்து) 845 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சவுத்தி (நியூசிலாந்து) 817 என்ற புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ரபடா (தென் ஆப்பிரிக்கா) 802 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

இதில் ஸ்டூவர்ட்பிராட் தரவரிசையில் பின்தங்கியும், ரபடா முன்னேற்றம் அடைந்தும் காணப்பட்டனர்.

Tags:    

Similar News