செய்திகள்
பிரேக்டேன்சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக பிரேக்டேன்சிங் நடன போட்டிக்கு அனுமதி

Published On 2020-12-08 00:51 GMT   |   Update On 2020-12-08 00:51 GMT
பாரீஸ் நகரில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பிரேக்டேன்சிங் நடனம் முதன்முறையாக ஒரு போட்டியாக சேர்க்கப்படுகிறது.
லாசேன்:

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தன.  இதற்காக வீரர்கள் தயாரான நிலையில் கொரோனா தொற்றால் வரும் 2021ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதிக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறினார்.

இதற்கடுத்து, பாரீஸ் நகரில் வரும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடிவாகி உள்ளது. இதில், முதல் முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக்டேன்சிங் ஒரு போட்டியாக சேர்க்கப்பட உள்ளது.

இதற்காக பிரேக்டேன்சிங்கில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களில் 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்து கொள்வார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஸ்கேட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய போட்டிகளும் முதன்முறையாக நடத்தப்படும். இதனை தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இந்த போட்டிகள் தொடரும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயல் வாரியம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News