செய்திகள்
டேவிட் வார்னர்

டேவிட் வார்னருக்கு காயம்: அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்

Published On 2020-11-29 14:34 GMT   |   Update On 2020-11-29 14:34 GMT
சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது பீல்டிங் செய்த டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டதால், கடைசி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. 6-வது ஓவரின்போது தவான் மிட்ஆஃப் திசையில் அடித்த பந்தை டேவிட் வார்னர் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். அப்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். நாளை காலை ஸ்கேன் செய்து பார்த்த பின்னர்தான் காயத்தின் வீரியம் குறித்து தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிந்த பின் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘எல்லா நேரங்களிலும் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது சிறந்தது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி பெற்று தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டேவிட் வார்னரின் உடற்தகுதி குறித்து எந்த ஐடியாவும் இல்லை. அவர் அணியில் இடம் பெறுவது குறித்து நான் நினைக்கவில்லை. தொடக்க வீரராக அவர் விளையாடியது நம்பமுடியாத வகையில் இருந்தது. அதன்பின் ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசம் செய்தார். ஹென்ரிக்ஸ் அதிக அளவில் பந்து மாற்றி மாற்றி வீசினார்’’ என்றார்.

முதல் போட்டியில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர், இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் 83 ரன்கள் அடித்தார்.
Tags:    

Similar News