வர்ணனை செய்யும்போது நவ்தீப் சைனி தந்தை இறந்ததாக தவறுதலாக கூறியதற்கு ஆடம் கில்கிறிஸ்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்
பதிவு: நவம்பர் 29, 2020 16:30
கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று முன்தினம் சிட்னியில் நடைபெற்றது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடம் பிடித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது நவ்தீப் சைனியைப் பார்த்து தந்தை இறந்த போதிலும், சொந்த நாடு திரும்ப விரும்பாமல் அணிக்காக விளையாடுவேன் எனக் கூறிய தைரியமான இதயத்தை கொண்டவர் என்றார்.
நியூசிலாந்து அணி வீரர் மெக்கிளேனகன், இறந்தது நைவ்தீப் சைனி தந்தை அல்ல. முகமது சராஜ் தந்தை என கில்கிறிஸ்டுக்கு தெரிவித்தார். தனது தவறை புரிந்து கொண்ட ஆடம் கில்கிறஸ் நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் முகமது சிராஜ் தந்தை காலமானார். விரும்பினால் நாடு திரும்பலாம் என முகமது சிராஜிக்கு பிசிசிஐ அனுமதி அளித்தது. ஆனால் முகமது சிராஜ் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார்.
Related Tags :