செய்திகள்
மோர்கன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு
மோர்கன் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
துபாயில் நடக்கும் ஐபிஎல் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 34 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆக, அந்த்ரே ரஸல் 11 பந்தில் 25 ரன்கள் அடித்தார். கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 68 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது.