செய்திகள்
ஐசிசி

சேர்மன் பதவிக்கு வேட்புமனு செய்க... ஐசிசி அழைப்பு

Published On 2020-10-12 17:11 IST   |   Update On 2020-10-12 17:11:00 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக இருந்த ஷஷாங்க் மனோகர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இன்னும் புதிய சேர்மன் நியமிக்கப்படவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக இருந்தவர் ஷஷாங்க் மனோகர். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அந்த இடம் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதற்கான நடவடிக்கை செயல்படாமல் இருந்தது.

பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி ஐசிசி சேர்மனாக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. அதற்கு ஏற்ப கங்குலி தயாராகி வந்தார். ஆனால் பிசிசிஐ-யில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் சேர்மன் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் வரும் 18-ந்தேதி விண்ணப்பம் செய்வதற்கான கடைசிக்காலம் எனத் தெரிவித்துள்ளது.

Similar News