செய்திகள்
கைது செய்யப்பட்ட நபர்களுடன் போலீசார்

ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- மத்திய பிரதேசத்தில் 6 பேர் கைது

Published On 2020-10-12 08:13 IST   |   Update On 2020-10-12 15:26:00 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதில், இந்தூர் ராஜேந்திர நகரில் உள்ள சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜேந்திரா நகருக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 


கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 18 செல்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News