செய்திகள்
ஹைதர் அலி

ஹிட்மேன் உடன் ஒப்பிடுவதை அசௌகரியமாக உணர்கிறேன்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்

Published On 2020-10-10 18:13 IST   |   Update On 2020-10-10 18:13:00 IST
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா உடன் ஒப்பிடுவதை அசௌகரியமாக உணர்கிறேன் என பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வயது பேட்ஸ்மேன் ஹைதர் அலி. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்தது.

இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் களம் இறங்கிய ஹைதர் அலி முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். பாகிஸ்தான் அணியின் வருங்கால நட்சத்திர வீரராக கருதப்படும் ஹைதர் அலியை ரோகித் சர்மாவுடன் ஒப்பிடுகிறார்கள்.

அப்படி ஒப்பிடுவதை அசௌகரியமாக உணர்கிறேன் என ஹைதர் அலி தெரிவித்துள்ளார். மேலும்,  இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மா டாப் பேட்ஸ்மேன், என்னை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அசௌகரியமாக உணர்கிறேன். ஒப்பீடு வேண்டாம். அவர் ஏற்கனவே அதிக அளவில் சாதித்துள்ளார்.

மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாக ரசித்து விளையாட முடியும். எனக்கு முதல்தர கிரிக்கெட் சிறப்பாக அமைந்தது. பயிற்சியாளர் முகமது வாசிம் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.

Similar News