செய்திகள்
நாசர் அல்-கெலைஃபி

28 மாத சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் பி.எஸ்.ஜி. கால்பந்து அணி தலைவர் நாசர் அல்-கெலைஃபி

Published On 2020-09-23 18:44 IST   |   Update On 2020-09-23 18:44:00 IST
மத்திய கிழக்கு நாடுகளுக்கான மீடியா உரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸின் தலைசிறந்த கிளப் அணியான பி.எஸ்.ஜி.-யின் தலைவர் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் பணக்கார கால்பந்து கிளப் அணிகளில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியும் ஒன்று. இதன் தலைவராக நாசர் அல்-கெலைஃபி உள்ளார். 2023-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடக்கிறது.

இதற்கான மீடியா உரிமை ஏலத்தை பிஃபா நடத்தியது. அப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான உரிமையை பெற பெல்என் ஸ்போர்ட் (belN Sport) நிறுவனம் விரும்பியது. பிஃபாவுக்கும், பெல்என் ஸ்போர்ட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பிஃபா பொதுச் செயலாளர் வால்க்கே என்பவர் ஆதாயம் பெற்றதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் உள்ள ஒரு வீட்டை வாங்க வால்க்கே விரும்பியுள்ளார். இதற்கு பிஎஸ்ஜி அணி தலைவர் உதவி புரிந்துள்ளார். இதற்காக 6.4 மில்லியன் யூரோ செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை சுவிட்சர்லாந்தில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாசர் அல்-கெலைஃபி-க்கு 28 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். ஆனால், நாசர் அல்-கெலைஃபி மற்றும் பெல்என் ஸ்போர்ட் சேர்மன் ஆகியோர் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

Similar News