செய்திகள்
சென்னை வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை வெற்றிபெற 18 பந்துகளில் 58 ரன்கள் தேவை

Published On 2020-09-22 17:44 GMT   |   Update On 2020-09-22 17:47 GMT
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 18 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.

பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்துள்ளார்.

16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஜாதவ் 22 டாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தற்போது டு பிளஸ்சிஸ் உடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் டோனியுடன் விளையாடி வருகிறார்.  சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. 

சென்னை அணி வெற்றி பெற 18 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்படுகிறது. டு பிளஸ்சிஸ் 55 ரன்னுடனும், டோனி 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர் 

Tags:    

Similar News